நித்திரவிளையில் மதுபானம் பதுக்கி விற்றதாக 3 பேர் கைது

0
61

நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விறப்பதாக எழுந்த புகாரின் பேரில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார்  திருட்டுத்தனமாக மது விற்பனை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது நடைக்காவு பகுதியில் மது வைத்திருந்த ராஜேஷ் (35) என்பவரை மடக்கி பிடித்து 10  குவாட்டர் மது பாட்டில்களையும்,   எஸ்டி மங்காடு புதுக்குளம் பகுதியில் மது விற்பனைக்கைக்கு வைத்திருந்த பிஜு (41) என்பவரை படித்து 8 பாட்டில்களையும், ஆலங்கோடு பருத்தி விளை பகுதியில் மது பதுக்கிய றசல் ராஜா ( 55) என்பவரை மடக்கி ஆறு குவாட்டர் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேர் மீதும் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.