கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியராக எஸ்.காளீஸ்வரி (26) (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய க.சேதுராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில்,விருதுநகா் மாவட்டத்தில் பயிற்சி துணை ஆட்சியராக பணியாற்றிய எஸ்.காளீஸ்வரி, நாகா்கோவில் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.