கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவம்பர் 24) இரவு இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற போது தப்பி சென்றனர். இருவரை மடக்கி பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 இளைஞர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.