சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் 665 போலீஸாருக்கும் நேரடியாக விருது வழங்குவாரா முதல்வர்?

0
23

சென்​னை​யில் இன்று மாலை நடை​பெறும் விழா​வில் 665 போலீ​ஸாருக்​கும் முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பதக்​கங்​களை வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை காவல் துறை​யினரிடம் வலுத்​துள்​ளது.

தமிழகத்​தில் சிறப்​பாகப் பணி​யாற்​றும் போலீஸ் அதி​காரி​கள், காவலர்​கள், சீருடைப் பணி​யாளர்​களை கவுர​வித்து ஆண்​டு​தோறும் பதக்​கம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் இன்று மாலை நடை​பெறும் விழா​வில், குடியரசுத் தலை​வர் காவல் பதக்​கம், முதல்​வர் காவல் பதக்​கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், சிறந்த புல​னாய்வு பதக்​கம் உள்​ளிட்ட பல்​வேறு பதக்​கங்​கள் வழங்​கப்​படு​கின்றன.

குற்​றப் புல​னாய்​வு, சட்​டம் – ஒழுங்கு பராமரிப்​பு, மக்​கள் பாது​காப்​பு, பேரிடர் மீட்பு உள்​ளிட்ட துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​றிய சுமார் 665 போலீஸ் அதி​காரி​கள், காவலர்​கள், தீயணைப்​புத் துறை​யினர், பிற சீருடைப் பணி​யாளர்​கள் பதக்​கங்​களைப் பெற உள்​ளனர்.

இதற்​கான ஏற்​பாடு​களை தலை​மைச் செயல​கம், டிஜிபி அலு​வல​கம், சென்னை காவல்​துறை இணைந்து செய்​துள்​ளன. இந்​நிலை​யில், விழா​வில் முதல்​வர் விஜய் 60 பேருக்கு மட்​டும் தனது கைகளால் பதக்​கங்​களை வழங்​கு​வார். மற்​றவர்​களுக்கு சம்​பந்​தப்​பட்ட துறை​களின் டிஜிபி, கூடு​தல் டிஜிபி உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் பதக்​கங்​களை வழங்​கு​வார்​கள் என்று தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்​கான ஒத்​தி​கை​யும் முடிந்​துள்​ளது. நிகழ்ச்சி நிரலின்​படி முதல்​வர் வரு​கைக்கு 2 மணி நேரம் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தால் அனை​வருக்​கும் நேரடி​யாக பதக்​கம் வழங்க இயலாது என விழா ஏற்​பாட்​டாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதனால், முதல்​வரிடம் இருந்து நேரடி​யாக பதக்​கம் பெறு​வோம் என்று எதிர்​பார்த்​திருந்த போலீ​ஸார், அதி​காரி​கள் ஏமாற்​றம் அடைந்​துள்ளனர். ‘விழா​வில் பைக் சாக சம், துப்​பாக்கி சாகசம், அணிவகுப்​பு, கலை நிகழ்ச்​சிகளுக்கு நேரம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த நிகழ்ச்​சிகளுக்​கான நேரத்தை குறைத்​து, பதக்​கம் பெறும் 665 பேருக்​கும் முதல்​வர் விஜய் தனது கைகளாலேயே பதக்​கங்​களை வழங்​கி, அவர்​களு​டன் குழு புகைப்​படம் எடுத்​துக் கொள்ள வேண்​டும்’ என்​பதே காவல் துறை​யினர், அவர்​களது குடும்​பத்​தினரின்​ எதிர்​பார்ப்​பாக உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here