அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து தமிழகத்தை நிச்சயம் மீட்போம்: உதயநிதி நம்பிக்கை

0
31

திரு​வேற்​காட்​டில் திமுக நிர்​வாகி இல்ல திருமண விழா நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி ஸ்டா​லின், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்​களை வாழ்த்​தினர்.

விழா மேடை​யில் இரு​வரும் கட்​டியணைத்​துக் கொண்​டனர். பிறகு அரு​கருகே அமர்ந்து பேசிக் கொண்​டிருந்​தனர். விரை​வில் நடக்​க​வுள்ள இடைத்​தேர்​தலில் சீமானை பொதுவேட்​பாள​ராக நிறுத்​தி, தவெக​வுக்கு நெருக்​கடி கொடுக்க திமுக, அதி​முக தயா​ராகி வரு​வ​தாக கூறப்​படும் நிலை​யில் இந்த சந்​திப்​பு தமிழக அரசி​யலில் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளன.

இந்த நிகழ்ச்​சி​யில் உதயநிதி ஸ்டா​லின் பேசுகை​யில், “இன்று நாட்​டில் என்ன நடக்​கிறது என்​ப​தை, நீங்​கள் அனை​வரும் பார்த்​துக் கொண்​டிருக்​கிறீர்​கள். சில பேர் சோஃபா வந்த உடனே நம்மை விட்​டு​விட்​டுச் சென்​றிருக்​கிறார்​கள்.

ஆனால், நீங்​கள் அத்​தனை பேரும் நாங்​கள் என்​றைக்​கும் திமுக​வுடன் இருப்​போம் என்று உறு​தி​யோடு வந்​திருக்​கிறீர்​கள். இஸ்​லாமியர்​களுக்​கும் திமுக​வுக்​கு​மான உறவை யார் நினைத்​தா​லும் பிரிக்க முடி​யாது, உங்களுக்கு திமுக என்​றைக்​குமே ஒரு காவல் அரணாக இருக்​கும்.

இப்​பொழுது ஏற்​பட்​டிருக்​கக்​கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்​தி​லும் நம் தமிழகத்தை நிச்​ச​யம் உங்​களுக்​காக நின்று காப்​போம், தமிழ் ​நாட்டை மீட்​போம்” என்​றார்.

முன்​ன​தாக சீமான் பேசுகை​யில், “தன் பிள்​ளை​களுக்கு நல்ல கல்​வியை​யும் ஒழுக்​கத்​தை​யும் கொடுப்​பது​தான் பெற்​றோர்​களின் உயரிய கடமை​யும் பொறுப்​பும் ஆகும்” என்று நபிகள் கூறி​யுள்​ளார். மணமக்​களாகிய நீங்​களும் வருங்​காலத்​தில் பிள்​ளை​களுக்கு அப்​படிப்​பட்ட ஒழுக்​கத்​தை​யும் கல்​வியை​யும் கொடுக்​கும்​ பெற்​றோர்​களாக விளங்​க வேண்​டும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here