“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” – ம.பி. ஜபல்பூர் படகு விபத்தில் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம்

0
23

மத்​தி​யப் பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் உள்ள பார்கி அணை​யில் சுற்​றுலாப் பயணி​கள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்​குள்​ளான​தில், பல குடும்​பங்​கள் தங்​களின் உறவினர்​களைப் பறி​கொடுத்​துப் பெரும் சோகத்​தில் ஆழ்ந்​துள்​ளன.

மகிழ்ச்​சி​யாக தொடங்​கிய அந்த சுற்​றுலாப் பயணம், மரணப் போராட்​ட​மாக மாறிய துயர​மான தருணங்​களை விபத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் கண்​ணீருடன் பகிர்ந்து கொண்​டுள்​ளனர். இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை தற்​போது 11-ஆக உயர்ந்​துள்​ளது. சனிக்​கிழமை நடை​பெற்ற மீட்​புப் பணி​யின்​போது மேலும் இரண்டு குழந்​தைகளின் உடல்​கள் கண்டெடுக்கப்பட்​டன.

விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய வழக்​கறிஞர் ரோஷன் ஆனந்த் வர்மா கூறுகை​யில், “படகு ராட்சத அலைகளில் சிக்​கிக் கொண்​டது. சுமார் அரை மணி நேரம் அங்கு மரண ஓலம் கேட்​டது. நாற்​காலிகள், மேஜைகள் மற்​றும் மனிதர்​கள் ஒரு​வர் மீது ஒரு​வர் விழுந்​தனர். படகின் ஒரு பகுதி உடைந்து உள்ளே தண்​ணீர் புகத் தொடங்​கியது. எங்​கள் கண் முன்னே மரணம் தெரிந்​தது.

உடனடி​யாகச் செயல்​பட்​டு, அங்​கிருந்த ‘லைஃப் ஜாக்​கெட்​’களை எடுத்து எங்​கள் குடும்​பத்​தினர் ஒவ்​வொரு​வருக்​கும் அணிவித்தோம். அவ்​வாறு செய்​யா​விட்​டால் நாங்​கள் யாரும் இன்று உயிரோடு இருந்​திருக்க மாட்​டோம். 11 வயது குழந்தையுடன் எப்​படியோ கரையை நோக்கி நீந்தி உயிர் தப்பினோம். வானிலை முன்​னெச்​சரிக்கை இருந்​தும் லாபத்தை மட்​டுமே நோக்​க​மாகக் கொண்டு படகு இயக்​கப்​பட்​டுள்​ளது.

அவசர காலத்​தில் ஊழியர்​கள் முறை​யான வழி​காட்​டு​தல்​களை வழங்​க​வில்​லை. மீட்​புப் படகு​கள் உடனடி​யாக வந்​திருந்​தால் அத்தனை உயிர்​களை​யும் காப்​பாற்​றி​யிருக்​கலாம். இதற்​குப் பொறுப்​பேற்று சுற்​றுலாத் துறை அமைச்சரை பத​வியி​ல் இருந்​து நீக்​க வேண்​டும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here