விஷாலின் ‘மகுடம்’ ஆக.14-ல் ரிலீஸ்!

0
28

விஷால் இயக்கி நடித்திருக்கு ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7-ம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால் இயக்கி நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை விஷால் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரவி அரசுவின் கதையை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பினை தொடங்க முடியும் என பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து படப்பிடிப்பினை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், படத்தின் வெளியீடு தொடர்பான தகவலை நடிகரும், இயக்குநருமான விஷால் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘மகுடம் தயாராகிவிட்டது. உலகெங்கும் ‘மகுடம்’  ட்ரெய்லர் ஆக.7-ம் தேதியும், திரைப்படம் ஆக.14-ம் தேதியும் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here