வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர் – 30 நிமிடத்தில் மடக்கிப் பிடித்தது போலீஸ்

0
25

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்​பிஐ) வங்​கிக் கிளை உள்​ளது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளரைப் போல ஒரு நபர் வந்​தார். அவர் சிவப்பு நிறகுர்​தா​வும், கருப்பு நிற பைஜா​மா​வும் அணிந்​திருந்​தார்.

அவர் நேராக கேஷ் கவுன்ட்​டர் அருகே வரும்​போது தனது முகத்தை துணி​யால் மறைத்​துக் கொண்​டு, பையில் வைத்​திருந்த மிள​காய் பொடியை வங்கி ஊழியர்​கள் கண்​ணில் தூவி​னார். கண்​ணில் மிள​காய் பொடி பட்​டதும் வங்கி ஊழியர்​கள் அலறித் துடித்​தனர்.

இந்த சந்​தர்ப்​பத்​தைப் பயன்​படுத்​திக் கொண்ட அந்த நபர், கவுன்ட்​டரிலிருந்த ரூ.4 லட்​சம் ரொக்​கத்தை எடுத்​துக் கொண்டு தப்​பி​னார். அவரைப் பிடிக்க ஊழியர்​களும், வங்​கிக் காவலாளியும் முயன்​றனர். ஆனால் வங்​கி​யில் இருந்த கூட்டத்தைப் பயன்​படுத்தி தப்​பியோடி​னார். இதுதொடர்​பாக போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விரைந்து வந்து வங்​கிக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் இருந்த கண்​காணிப்​புக் கேம​ராக்​களில் பதி​வாகி​யிருந்த பதிவு​களை சோதனை செய்தனர்.

இதையடுத்து மர்ம நபர் தப்​பியோடிய திசையை வைத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்​தனர். இந்​நிலையில் வங்​கிக் கிளைக்கு சற்று தொலை​வில் அந்த மர்ம நபரை, போலீ​ஸார் மடக்​கிப் பிடித்​தனர். அவரிட​மிருந்து ரூ.4 லட்சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. தப்​பியோடிய அரை மணி நேரத்திலேயே அவரை கைது செய்த போலீ​ஸாருக்கு பாராட்டு தெரிவிக்​கப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here