அச்சிறுப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம்: முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

0
255

அச்சிறுப்பாக்கத்தில் இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர், பட்டியலின மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்.

இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.1 கோடியே 35 லட்சத்து 74 ஆயிரத்து 909 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வருவாய்த் துறை மூலம் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மேலும் ரூ.82 லட்சத்தில் சுற்று சுவர் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டைமலை சீனிவாசனின் முழு உருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 4,300 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் முழு உருவ வெங்கல சிலையுடன் கூடிய இந்த நினைவு மண்டபம் திறப்பு விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. செல்வம் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here