தவெகவினர் தற்குறிகள் அல்ல; அம்புக்குறிகள்: நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்து

0
21

தவெகவினர் தற்​குறிகள் அல்ல கூர்​மை​யான அம்​புக்​குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரி​வித்​தார். அரசி​யலுக்கு வரு​வது தொடர்​பாக விரை​வில் நல்ல முடிவை அறி​விப்​பேன் என்​றும் அவர் கூறி​னார்.

சென்னை உத்​தண்​டி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ரசிகர்மன்ற நிர்​வாகி​களு​டன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அரசி​யலுக்கு வரலா​மா, வேண்​டாமா என மக்​களிடம் கேட்​டிருந்​தேன்.

சிறிய​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை, ‘நீங்​கள் வராமல் வேறு யார் வரு​வார்​கள்? கட்​டா​யம் அரசி​யலுக்கு வாருங்​கள்’ என மிகுந்த அன்​போடும் உரிமையோடும் அழைப்​பது எனக்கு மகிழ்ச்சி அளிக்​கிறது. இது தொடர்​பாக, நல்ல முடிவை எடுத்​துள்​ளேன். விரை​வில் எனது ரசிகர்​களை அழைத்​து, என் அம்​மாவை மேடை​யில் அமர வைத்து அந்த நல்ல முடிவை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​விப்​பேன்.

அரசி​யலுக்கு வரு​கிறேனா இல்​லையா என்​பதை அறி​வித்த பிறகே, தொடர்ந்து படங்​களில் நடிப்​பேனா என்​ப​தைப் பற்​றித் தெரி​விப்​பேன். தவெக அரசின் செயல்​பாடு​கள் நன்​றாக உள்​ளன. புதி​தாக ஒரு வீட்​டுக்கு குடிபெயர்ந்​தால் அங்​குள்ள பிரச்சினை​களை கண்​டறிந்து சரிசெய்​யவே சிறிது காலம் பிடிக்​கும்.

மேலும், அங்​குள்ள தெரு நாய்​கள் புதி​தாக வந்த நம்​மைப் பார்த்து கத்​தத்​தான் செய்​யும். அதைக் கட்​டுப்​படுத்த அதற்கு பிடித்த பிஸ்​கட்​டையோ அல்​லது பிரி​யாணி​யையோ கொடுத்து சமாளிக்க நேரம் எடுக்​கும்.

அது​போலவே புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள அரசுக்கு நாம் கொஞ்​சம் கால அவகாசம் கொடுக்க வேண்​டும். மாற்​றம் வேண்​டும் என நினைத்​தோம். இப்​போது மாற்​றம் வந்​து​விட்​டது. விஜய் ரசிகர்​கள், தொண்​டர்​கள் யாரும் தற்​குறிகள் அல்ல.

அவர்​கள் தவெக​வின் கூர்​மை​யான அம்​புக்​குறிகள். நான் சண்டை போட​வோ, வெறுப்பு அரசி​யல் செய்​யவோ இங்குவரவில்லை. என்​னால் முடிந்​ததைமக்​களுக்கு செய்து கொண்​டிருக்​கிறேன் என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here