ட்​ரம்​பின் ஊடக பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் ராஜினாமா

0
29

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்​பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செய​லா​ளர் கரோலின் லீவிட் பதவி விலகு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக வெள்ளை மாளி​கை​யின் ஊடகப் பிரிவு செய​லா​ள​ராகப் பணி​யாற்​றியது தனது வாழ்​நாளின் மிகப்​பெரிய கவுர​வம் மற்​றும் ஒரு அற்​புத​மான பயணம் என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வெள்ளை மாளிகை ஊடகச் செய​லா​ள​ரும், எனது மிக​வும் நம்​பிக்​கைக்​குரிய உதவி​யாளர்​களில் ஒரு​வரு​மான கரோலின் லீவிட், தனது குழந்​தைகள் மற்​றும் குடும்​பத்​தினருடன் கூடு​தல் நேரத்தைச் செல​விடு​வதற்​காக இந்த மாத இறு​தி​யுடன் தனது பதவியி​லிருந்து வில​கு​கிறார். அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன்.

வரவிருக்​கும் இடைத்​தேர்​தலில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்றியைப் பெற நாம் பணி​யாற்றி வரும் சூழலில், கரோலின் தொடர்ந்து எனது முதன்​மைத் தனி ஆலோ​சக​ராக​வும், குடியரசுக் கட்​சி​யின் செல்​வாக்​குமிக்​கக் குரலாக​வும் திகழ்​வார். வெள்ளை மாளிகை ஊடக பிரிவு செய​லா​ளர் பொறுப்​பில் இருந்த சிறந்த அதி​காரி​களில் கரோலினும் ஒரு​வர். சிறப்​பான பணிக்​காக அவருக்கு எனது நன்றிகள். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here