கவனம் ஈர்த்த முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் – நேபாளத்தில் 6 நாளில் 100 மீட்புப் பணிகள்

0
24

நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார்.

இதுகுறித்​து, நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி கூறிய​தாவது: வெள்​ளத்​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட ரசுவா பகு​தி​யில் இன்​னும் ஏராளமானோர் காணா​மல் போயுள்​ளனர். திடீர் வெள்​ளத்​துக்​குப் பிறகு திமுரே பகு​தி​யில் இருந்து முதல் இரண்டு நாட்​களில் மட்​டும் 200-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர்.

ராணுவத்​தின் 6 ஹெலி​காப்​டர்​கள் இந்த மீட்​புப் பணி​யில் ஈடுபட்டன. 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடுபட்டு ஏராள​மானோரை காப்​பாற்​றினேன். ஒவ்​வொரு முறையும் நான் சென்று தரை​யிறங்​கும்​போது, அங்கு மக்​கள் இருப்​ப​தை​யும், அவர்​கள் எங்​களை நோக்கி கையசைப்​ப​தை​யும் பார்க்​கிறேன். அப்​போது, ‘நீங்​கள் உயிர் தப்​பி​விட்​டீர்​கள்’ என்று அவர்​களிடம் கூறுகிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

யார் இந்த பிரியா அதி​காரி?

ஆண்​கள் ஆதிக்​கம் செலுத்​தும் துறை​யாக கருதப்​பட்ட விமானப் போக்​கு​வரத்​துத் துறை​யில், நேபாளத்​தின் முதல் பெண் ஹெலிகாப்​டர் கேப்​டன் என்ற பெரு​மையை பிரியா அதி​காரி பெற்​றார். சுற்​றுச்​சூழல் அறி​வியல் படித்​துள்​ளார். பின்​னர் விமானப் பணிப்​பெண்​ணாக பணி​யாற்​றி​னார். அதன் பிறகு, பிலிப்​பைன்ஸ் சென்று ஹெலி​காப்​டர் ஓட்​டு​வதற்​கான பயிற்சியை பெற்​றார். 2017-ம் ஆண்டு முழுநேர ஹெலி​காப்​டர் விமானி​யாக ஆனார்.

பின்​னர், அதிக உயரத்​தில் மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வ​தில் நிபுணத்​து​வம் பெற்​றார். இமயமலைப் பகு​தி​களில் தேடு​தல் மற்றும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டதுடன், எவரெஸ்ட் சிகரத்​தில் காயமடைந்த மலை​யேற்ற வீரர்​களை​யும் மீட்​டுள்​ளார். சுமார் 6,200 மீட்​டர் உயரம் வரை​யிலும் அவர் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here