தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

0
23

தமிழகத்​தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்​கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது.

தமிழகத்​தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் வழி​யாக, தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு வாக​னங்​கள், அரசு, ஆம்னி பேருந்​துகள், பயணி​கள் வாக​னங்​கள் உள்​ளிட்​டவை பயணித்து வரு​கின்​றன.

இச்​சாலைகளை பயன்​படுத்​தும் வாக​னங்​களிடம் கட்​ட​ணம் வசூலிக்க, தமிழகத்​தில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. தேசிய நெடுஞ்​சாலைகள் கட்டண விதி​களின் படி, ஒவ்​வொரு ஆண்​டும் ஏப்​ரல் மற்​றும் செப்​டம்​பர் மாதத்​தில் சுங்​கச் சாவடிகளில், கட்​ட​ணம் மாற்றி அமைக்​கப்​படு​கிறது.

அதன்​படி, பாளை​யம், கோட்​டக​வுண்​டம்​பட்​டி, ராசம்​பாளை​யம், விக்​கிர​வாண்​டி, மேட்​டுப்​பட்​டி, நாதன்​கரை, வீரசோழபுரம், பொன்​னம்​பாலப்​பட்​டி, திருப்​ப​ராய்த்​துறை, மணவாசி, செங்​குறிச்​சி, திரு​மாந்​துறை, சமயபுரம், வேலஞ்​செட்​டியூர், கொழிஞ்​சிபட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 15 சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் நேற்று முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதனால், வாக​னங்​களுக்கு ஏற்​றார்​போல், ரூ.5 முதல் 20 வரை கட்​ட​ணம் அதி​கரித்​துள்​ளது. தமிழ்​நாடு லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளனத்​தின் தலை​வர் முரு​கன் வெங்​க​டாசலம் கூறுகை​யில்​,“தமிழகத்​தில் மொத்​த​முள்ள சுங்​கச்​சாவடிகளில், 30 சுங்​கச்​சாவடிகள் காலா​வ​தி​யானது. இருப்​பினும், சாலை மேம்​பாட்டு மற்​றும் விரி​வாக்க பணியை காரணம் காட்​டி, சுங்​கக்​கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்டு வரு​கிறது.

ஆண்​டு​தோறும் சுங்​கக் கட்​ட​ணம் உயர்​கிறது. ஆனால், போதிய சாலை பராமரிப்பு பணி​கள் இல்​லாத​தால், விபத்​துகளும் அதி​க​மாக நடக்​கின்​றன. எனவே, காலா​வ​தி​யான சுங்​கச்​சாவடிகளை மூட, மத்​திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்​தம் தர வேண்​டும்” என்​றார்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சுங்​கச்​சாவடி கட்டண உயர்வை உடனடி​யாகத் திரும்​பப் பெறு​வதுடன், ஒப்​பந்​தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்​கச்​சாவடிகளை​யும் உடனடி​யாக அகற்ற வேண்​டும்​” என்​று வலி​யுறுத்​தியுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here