கோடநாடு பங்களாவை நீதிபதிகள் ஆய்வு செய்யக் கோரி அளித்திருந்த மனு வாபஸ்

0
27

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உட்பட பத்து பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் காமேஸ்வரன் மற்றும் சிபிசிஐடி. போலீஸார் ஆஜராகினர். குற்றவாளிகள் தரப்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.

நீதிபதி முரளிதரன் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் காமேஸ்வரன் பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, 10-வது குற்றவாளி ஜித்தின்ஜாய் சார்பில், கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவை நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here