96-வது பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு அரசு மரியாதை

0
24

இந்​தி​யா​வின் ஏவு​கணை நாயகன், மக்​கள் குடியரசு தலை​வர் என போற்​றப்​படும் அப்துல் கலாமின் 96-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்​டி, தமிழக அரசின் சார்​பில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிர​பாகர், அமைச்​சர்​கள் ப.வெங்​கடரமணன், ஏ.ராஜ்மோகன், ஜா.​முகமது பர்​வேஸ் ஆகியோர் சென்​னை, அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் அமைந்​துள்ள கலாமின் திரு​வுரு​வச் சிலைக்கு மாலை அணி​வித்​தும், அவரது படத்​துக்கு மலர் தூவி​யும் மரி​யாதை செலுத்​தினர்.

அப்​துல் கலாமின் பிறந்​த​நாளை முன்​னிட்டு தமிழக ஆளுநர் ஆர்​.​வி. அர்​லேகர் சமூக வலைத்​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘இந்​தி​யா​வின் விண்​வெளி மற்​றும் பாது​காப்பு திட்​டங்​களில் அப்​துல் கலாமின் அளப்​பரிய பங்​களிப்​பு​கள் நம் நாட்​டின் அறி​வியல் திறன்​களை​யும், சுய​சார்​பை​யும் வலுப்​படுத்​தின. வளர்ந்த இந்​தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வை 2047-ல்

வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற நமது இலக்கை நோக்​கிய பயணத்​துக்கு வழி​காட்​டி​யாக இருக்​கிறது. வலிமை​யான, வளமை​யான, சுய​சார்​புள்ள இந்​தி​யாவை உரு​வாக்​கும் வகை​யில் கலாமின் கொள்​கைகளை நிலைநிறுத்த உறு​தி​யேற்​போம்’’ என்று கூறி​யுள்​ளார்.

முதல்​வர் விஜய் சமூகவலைத்​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் பிறந்​த​நாளில், அவர் நாட்​டிற்கு ஆற்​றிய அரும்​பணி​களை நினை​வு​கூர்ந்து போற்றி வணங்​கு​கிறேன்.

இஸ்ரோ விஞ்​ஞானி, இந்​திய அரசின் முதன்மை அறி​வியல் ஆலோ​சகர், குடியரசுத் தலை​வர் எனப் பல்​வேறு உயரிய பொறுப்​பு​களை வகித்​த​ போ​தி​லும், ‘ஆசிரியர்’ என்ற அடை​யாளத்​தையே தன் வாழ்​வின் மகுட​மாகக் கரு​தி, இறுதி மூச்​சுவரை மாணவர்​களின் முன்​னேற்​றத்​திற்​காகத் தன் வாழ்வை அர்ப்​பணித்த அம்​மாமனிதரின் எளிமை, நேர்​மை, அறி​வியல் சிந்​தனை போற்​று​தலுக்​குரிய​வை​” என குறிப்பிட்​டுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here