சக்கர ஸ்நான நிகழ்வுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு: 8 நாளில் ரூ.25.79 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

0
28

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று சக்கரஸ்நான நிகழ்​வுடன் நிறைவடைந்தது. கடந்த 8 நாளில் ரூ.25.79 கோடி உண்​டியல் மூலம் பக்​தர்​கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நவ​ராத்​திரி பிரம்​மோற்​சவ விழா கடந்த அக்.12-ம் தேதி தொடங்​கியது. தொடர்ந்து 9 நாட்​கள் வரை நடை​பெற்ற இவ்​விழா, நேற்று காலை சக்​கர ஸ்நான நிகழ்ச்சி​யுடன் நிறைவுற்​றது. நிறைவு நாளான நேற்று காலை​யில் உற்​சவ மூர்த்​தி​களு​டன் சக்​கரத் தாழ்​வாரும் கோயி​லில் இருந்து பல்​லக்​கில் ஊர்​வலமாக கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரத்திற்கு (குளம்) கொண்​டுவரப்​பட்​டனர்.

அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலை​யப்​பர் மற்​றும் சக்​கரத்​தாழ்​வாருக்கு சிறப்பு திரு​மஞ்​சன நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இதனை தொடர்ந்து புனித தீர்த்​தவாரி நிகழ்ச்சி நடை​பெற்​றது. அப்​போது, அங்கு காத்​திருந்த திரளான பக்​தர்​கள் குளத்​தில் மூழ்கி ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்​ட​வாறு புனித நீராடினர். இந்​நிகழ்​வுடன் நவ​ராத்​திரி பிரம்​மோற்​சவ​மும் நிறைவடைந்​தது.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திரு​மலை திருப்பதி தேவஸ்தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர். நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிசந்​திரா மற்​றும் கூடுதல் நிர்வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிரம்​மோற்​சவத்தை விட இந்த ஆண்டு நவ​ராத்​திரி பிரம்​மோற்​சவத்​துக்கு சற்று குறைவான பக்​தர்​களே வருகை புரிந்தனர். இதற்கு தொடர் மழையும், சமூக வலை​தளங்​களில் பரவிய தவறான தகவல்​களுமே காரணம். இம்​முறை மின்​விளக்கு அலங்​காரங்​கள் மிக சிறப்​பாக இருந்​தன. கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்​களில் மட்​டும் 6.26 லட்​சம் பக்​தர்​கள் மூல​வரை தரி​சித்​துள்​ளனர்.

இதில் 2.44 லட்​சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்​தி​யுள்​ளனர். 22.60 லட்​சம் பேருக்கு அன்​னபிரசாதம் வழங்​கப்​பட்​டது. 34.34 லட்சம் லட்டு பிரசாதம் விநியோகம் செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.25.79 கோடி உண்​டியல் மூலம் காணிக்கை செலுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here