தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனாவிடம், இந்திய அணி தோல்வி கண்டது. டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்திய அணிகள் மோதின. முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் 19-21, 21-8, 12-21 என்ற கணக்கில் சீனாவின் லீ ஷி பேங்கிடம் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 21-13, 24-26 என்ற கணக்கில் சீனாவின் லியாங் வெய் காங், சாங் வாங் ஜோடியிடம் வீழ்ந்தது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-13, 21-15 என்ற கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்தார். மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், எம்.ஆர். அர்ஜுன் ஜோடி 17-21, 13-21 என்ற கணக்கில் சீனாவின் ஹி ஜி டிங், ரென் ஜியாங் யூ ஜோடியை வீழ்ந்தது.
கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 20-22., 21-19, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் சீனா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.















