திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (63) தனது மனைவி சுசீலாவுடன் (60) சிறுநீரக டயலிசிஸ் சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஆட்டோ மீது மோதியதில் பால்ராஜ், சுசீலா மற்றும் ஆட்டோ டிரைவர் கிறிஸ்டின் படுகாயமடைந்தனர். இதில் பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். திருவட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















