உரம் தட்டுப்பாடு இல்லை: நிர்மலா சீதாராமன் பதில்

0
93

நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி செலவினம் அதிகரிக்கவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த செலவை ரூ.50.65 லட்சம் கோடியிலிருந்து, ரூ.49.65 லட்சம் கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளது.

ஜனவரி மாதம் வரை அரசு ரூ.36.90 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. உரம் மானியத்துக்காக கூடுதலாக ரூ.19,230 கோடியும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மானியத்துக்கு ரூ.23,641 கோடி செலவு செய்ய அனுமதி கோரப்பட் டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு ரூ.41,822 கோடி உட்பட இதர செலவுக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான உரத்தில் பற்றாக்குறை ஏதும் நிலவவில்லை. மானியங்களுக்கு துணை மானியக் கோரிக்கையில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here