சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’

0
21

வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் ஒரு தாய், வறுமை மற்றும் சமூகச் சவால்களைக் கடந்து தனது மகனைச் செஸ் விளையாட்டில் சாதிக்க வைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக்கப் போராடும் உணர்வுபூர்வமான கதைக் களத்தை இத்திரைப்படம் பேசுகிறது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செஸ் விளையாட்டின் பின்னணியில் தாயும் மகனும் இடம்பெற்றுள்ளனர்.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here