திரையரங்கப் பரிணாமங்கள்: திரை முதல் ஹெச்.டி.ஆர் வரை | ஒளி என்பது வெளிச்சமல்ல 59

0
23

ஒரு திரைப்படம் எவ்​வாறு உரு​வாக்​கப்​படு​கிறது என்​ப​தற்கு இணை​யாக, அது எவ்​வாறு திரையிடப்​பட்டு, பார்​வை​யாளரால் உள்​வாங்​கப்​படு​கிறது என்​ப​தும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒளிப்​ப​திவாளர் உரு​வாக்​கும் ஒளி, வண்​ணம், நிழல், ஃபிரேமிங் ஆகியவை திரையரங்​கில் எந்த அளவுக்​குத் துல்​லிய​மாக வெளிப்​படு​கின்​றன என்​பதே பார்​வை​யாளரின் அனுபவத்​தைத் தீர்​மானிக்கிறது.

ஒரு காலத்​தில் பெரிய திரை​யும் சக்​திவாய்ந்த ஒலியும் திரையரங்​கின் சிறப்​பு​களாக இருந்​தன. இன்று லேசர் புரொஜெக் ஷன், ஹெச்.டி.ஆர்(HDR), பிரம்​மாண்​டத் திரைகள், எல்​இடி (LED) திரையிடல் தொழில்​நுட்​பங்​கள் எனத் திரையரங்க அனுபவம் பல பரிணா​மங்​களில் வளர்ந்​துள்​ளது. இந்த மாற்​றங்​கள் வெறும் தொழில்​நுட்ப முன்​னேற்​றங்​கள் மட்​டுமல்ல; படத்​தின் காட்​சிமொழியைப் பார்​வை​யாளர்​கள் உணரும் விதத்​தையும் மாற்​றுகின்​றன.

திரையின் விகிதம்: காட்​சி​யின் மொழி

திரைப்​படத்​தின் காட்​சி​யமைப்​பில் திரையின் விகிதம் (Aspect Ratio) அடிப்​படை​யானது. ஆரம்​பகாலத் திரைப்​படங்​களில் 1.37:1 என்ற அகாடமி விகிதம் பரவலாகப் பயன்​படுத்​தப்​பட்​டது. பின்​னர் அகலத்​திரை வடிவங்​கள் அறி​முக​மானபோது, அகன்ற நிலப்​பரப்​பு​களை​யும் பல கதாபாத்​திரங்களை​யும் ஒரே ஃபிரேமில் காட்​டுவதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கரித்​தன.

இன்று 2.39:1 என்ற சினிமாஸ்​கோப் வடிவம் பல திரைப்​படங்​களில் பயன்​படுத்​தப்​படு​கிறது. அதே வேளை​யில், ஐமேக்ஸ் போன்ற பிரீமியம் பெரிய திரை வடிவங்​கள் 1.90:1 மற்​றும் குறிப்​பிட்ட 70 எம்​எம் திரையிடல்​களில் 1.43:1 போன்ற விகிதங்​களை வழங்​கு​கின்​றன. இவை வழக்​க​மான அகலத்​திரையை விட அதி​க​மான செங்​குத்​துக் காட்​சிப்​பரப்பை வழங்​கு​கின்​றன.

இத​னால் பார்​வை​யாளரின் கவனம் கதாபாத்​திரங்​களி​லிருந்து சுற்​றுப்​புறச் சூழலுக்​கும் விரிவடைகிறது. ஆனால் பெரிய திரை மட்​டுமே சிறந்த அனுபவத்தை உறுதிசெய்​வதில்லை. படத்​தின் அசல் விகிதம், திரையிடப்​படும் வடிவம், இருக்​கைகளின் அமைப்பு மற்​றும் பார்​வை​யாளரின் பார்​வைக் கோணம் ஆகிய​வையும் முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

டிஜிட்​டல் புரொஜெக் ஷனில் லேசர் புரட்சி டிஜிட்​டல் சினிமாவில் நீண்​டகாலமாகப் பயன்​படுத்​தப்​பட்ட Xenon விளக்​குப் புரொஜெக் ஷனுடன் ஒப்​பிடும்​போது, லேசர் புரொஜெக் ஷன் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றத்தை வழங்​கு​கிறது. குறிப்​பாக RGB Laser தொழில்​நுட்​பம் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய முதன்மை வண்​ணங்​களுக்கு தனித்​தனி லேசர் ஒளி மூலங்​களைப் பயன்​படுத்து​கிறது.

இத​னால் விரிவான வண்​ணப் பரப்​பையும் சீரான பிரகாசத்​தையும், பெரிய திரைகளில் சிறந்த காட்​சித் தரத்​தையும் பெற முடியும். இருப்​பினும், Rec. 2020 போன்ற மிக விரிவான வண்​ணத் தரநிலையை முழு​மையாக அடைவது எல்லா புரொஜெக் ஷன் அமைப்​பு​களுக்​கும் சாத்​தி​யமில்லை; அது தொழில்​நுட்​பத்​தையும் அமைப்​பையும் பொறுத்​தது.

டிஜிட்​டல் சினிமா முன்​முயற்​சிகள்

டிஜிட்​டல் சினிமா இனி​ஷியேடிவ் (DCI) என்ற அமைப்பு வகுத்​துள்ள தரநிலைகளின்​படி, வழக்​க​மான திரையிடலுக்​கான வெள்ளை ஒளிப் பிரகாச இலக்கு 14 Foot-Lamberts ஆகும். இது சுமார் 48 Nits வெளிச்​சத்​துக்கு இணை​யானது. 2டி திரையிடலுக்​கான இந்த அளவு​கோல், திரையில் உள்ள ஒளி எவ்​வளவு துல்​லிய​மாகப் பார்​வை​யாளரைச் சென்​றடைய வேண்​டும் என்​பதை நிர்​ணயிக்க உதவு​கிறது.

IMAX, EPIQ, PXL: பிரீமியம் திரையரங்க அனுபவம் : பெரிய திரை, உயர் தெளிவுத்​திறன், மேம்​பட்ட ஒலி மற்​றும் சிறப்​பாக வடிவ​மைக்​கப்​பட்ட அரங்க அமைப்பு ஆகிய​வற்றை ஒருங்​கிணைக்​கும் திரையரங்​கங்​கள் Premium Large Format (PLF) எனப்​படு​கின்​றன.

ஐமேக்ஸ், திரையின் அளவை மட்​டுமல்​லாமல், அதன் வடிவ​மைப்பு, புரொஜெக் ஷன், ஒலி அமைப்பு மற்​றும் பார்​வை​யாளரின் இருக்கை அமைப்பு ஆகிய​வற்​றி​லும் கவனம் செலுத்து​கிறது. குறிப்​பிட்ட ஐமேக்ஸ் திரையிடல்​களில் விரிவாக்​கப்​பட்ட காட்​சிப் பரப்பு, திரைப்​பட இயக்​குநர் உரு​வாக்​கிய காட்​சிகளை மேலும் ஆழமாக அனுபவிக்க உதவு​கிறது.

இந்​தி​யாவில் எபிக் போன்ற பிரீமியம் திரையரங்க வடிவங்​களும், பிவிஆர் ஐநாக்ஸ் நிறு​வனத்​தின் பிஎக்ஸ்எல் போன்ற பெரிய திரை அனுபவங்​களும் பார்​வை​யாளர்​களுக்கு மாற்று வாய்ப்​பு​களை வழங்​கு​கின்​றன.

அவற்​றின் திரை அளவு, புரொஜெக் ஷன் தொழில்​நுட்​பம், ஒலி அமைப்பு மற்​றும் பிரகாசம் ஆகியவை ஒவ்​வொரு திரையரங்​கத்​துக்கு ஏற்ப மாறு​படும். எனவே, ஒரு பிராண்​டின் பெயரை மட்​டும் வைத்து எல்லா அரங்​கங்​களி​லும் ஒரே தரம் கிடைக்​கும் என்று கருத முடி​யாது.

HDR: ஒளியையும் இருளை​யும் துல்​லிய​மாக உணர்​தல் ஹை டைனமிக் ரேஞ்ச் தொழில்​நுட்​பம், திரையில் பிரகாச​மான பகுதி​களை​யும் இருண்ட பகுதி​களை​யும் அதிக நுணுக்​கத்​துடன் வெளிப்​படுத்​தும் நோக்​கத்​தைக் கொண்​டது.

குறிப்​பாக, ஒளிப்​ப​திவாளர் திட்​ட​மிட்ட நிழல் விவரங்​கள், முகங்​களில் விழும் மென்​மையான ஒளி, இரவுக் காட்​சிகளில் தெரியும் நுண்​ணிய தகவல்​கள் ஆகியவை பார்​வை​யாளரைச் சென்​றடைவதில் HDR முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

டால்பி விஷன் சினிமா போன்ற அமைப்​பு​கள், பாரம்​பரியத் திரையிடலை​விட அதிக பிரகாசத்​தையும் மாறு​பாட்​டையும் வழங்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. சில அமைப்​பு​கள் சுமார் 108 nits பிரகாச இலக்கை எட்​டக்​கூடும். ஆனால் உண்​மையான செயல்​திறன் அரங்​கின் வடிவ​மைப்பு, திரை, புரொஜெக் ஷன் மற்​றும் பராமரிப்பு ஆகிய​வற்​றைப் பொறுத்​தது.

Barco உரு​வாக்​கிய Lightsteering போன்ற தொழில்​நுட்​பங்​கள், திரையின் வெவ்​வேறு பகுதி​களுக்கு ஒளியைச் செலுத்​தும் முறையை மேம்​படுத்தி, பிரகாச​மான பகுதி​களுக்​கும் இருண்ட பகுதி​களுக்​கும் இடையேயான வேறு​பாட்டை அதி​கரிக்க முயல்​கின்​றன. இதன் நோக்​கம், புரொஜெக் ஷன் முறை​யிலேயே HDR போன்ற மேம்​பட்ட தாக்​கத்தை உரு​வாக்​குவதாகும்.

Cinema LED: திரையே ஒளி மூலமாக மாறும்​போது பாரம்​பரியத் திரையரங்​கில் புரொஜெக்​‌டர் ஒளியைத் திரையில் செலுத்து​கிறது. Cinema LED அமைப்​பில், திரையே ஒளியை வெளிப்​படுத்​தும் பிக்​சல்​களைக் கொண்​டுள்​ளது. இத​னால் ஒளிச்​சிதறல் குறைந்து, ஆழமான கருப்பு நிறத்​தையும் அதிக மாறு​பாட்​டையும் உரு​வாக்க முடியும்.

சில Cinema LED அமைப்​பு​கள் 300 nits அல்​லது அதற்​கும் அதி​க​மான பிரகாசத்தை வழங்​கும் திறன் கொண்​டவை. இது வழக்​க​மான சினிமா புரொஜெக் ஷனின் பிரகாசத்​தைவிடப் பல மடங்கு அதி​க​மாக இருக்​கலாம். இருப்​பினும், LED திரையிடலின் தரத்​தைப் பிரகாச எண்​ணால் மட்​டும் மதிப்​பிட முடி​யாது.

4DX, D-BOX: காட்​சி​யைத் தாண்​டிய அனுபவம் நவீனத் திரையரங்​கத் தொழில்​நுட்​பம் கண்​களுக்​கும் காதுகளுக்​கும் அப்​பால் உடலுணர்​வையும் இணைக்​கிறது. 4DX முறை​யில் இருக்​கைகளின் அசைவு, காற்று, நீர்த்​துளி​கள் மற்​றும் பிற சுற்​றுச்​சூழல் விளைவு​கள் திரைப்​படக் காட்​சிகளு​டன் ஒருங்​கிணைக்​கப்​படு​கின்​றன.

D-BOX தொழில்​நுட்​பம், திரைப்​படத்​துக்​காக வடிவ​மைக்​கப்​பட்ட இயக்​கக் குறிப்​பு​களுக்கு ஏற்ப இருக்​கைகளில் அசைவு​களை​யும் அதிர்​வு​களை​யும் உரு​வாக்​கு​கிறது. இவை பார்​வை​யாளரைச் சம்​பவங்​களு​டன் உடலளவில் இணைக்​கின்​றன. எனினும், இத்​தகைய அனுபவங்​கள் எல்லா திரைப் படங்​களுக்​கும் அவ​சி​ய​மானவை அல்ல; கதையின் தன்​மைக்​கும் இயக்​குநரின் நோக்​கத்​துக்​கும் ஏற்ப அவற்​றின் தாக்​கம் மாறு​படும்.

ஒளிப்​ப​திவாளரின் பார்​வையும் திரையரங்​கின் எதிர்​காலமும்

திரையரங்​கத் தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்சி, ஒளிப்​ப​திவாளரின் பொறுப்​பையும் புதிய நிலைக்கு எடுத்​துச் செல்​கிறது. கேம​ராவில் பதிவு செய்​யப்​பட்ட வண்​ணங்​களும் நிழல்​களும் இறுதி​யாகத் திரையரங்​கில் எப்​படித் தோன்​றும் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வது இன்​றியமையாத​தாகிறது.

ஒரே திரைப்​படம் வெவ்​வேறு திரையரங்​கு​களில் மாறு​பட்ட காட்​சித் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும் என்​ப​தால், சரியான மாஸ்டரிங், தரக் கட்​டுப்​பாடு மற்​றும் திரையிடல் தரநிலைகள் அவ​சி​யம். பெரிய திரை, லேசர் புரொஜெக் ஷன், HDR, Cinema LED மற்​றும் மேம்​பட்ட ஒலி ஆகியவை திரைப்​படத்தை அனுபவிக்​கும் புதிய வழிகளைத் திறந்​துள்​ளன.

ஆனால் தொழில்​நுட்​பமே சினிமாவின் நோக்​கமல்ல. கதையின் உணர்வை, ஒளிப்​ப​திவாளரின் காட்​சிப்​பார்​வையை, இயக்​குநரின் படைப்​பாற்​றலைப் பார்​வை​யாளரிடம் துல்​லிய​மாகக் கொண்​டுசேர்ப்​பதே அதன் உண்​மையான நோக்கம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here