‘ஜோ’ படத்தை அடுத்து ஹரிஹரன் ராம் இயக்கும் படத்துக்கு ‘அன்புடன் மகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவும் செய்கிறார். இதில் அவர் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் காட்சியமைப்பு, கதையின் தன்மை மற்றும் ஒட்டுமொத்த திரை அனுபவம் குறித்த பார்வையை வழங்கும் விரிவான லுக் புக்கையும் வெளியிட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 2027-ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.












