திங்கள்சந்தை அருகே காட்டுவிளையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை இரணியல் போலீசார் தேடி வருகின்றனர்

0
27
திங்கள்சந்தை அருகே காட்டுவிளையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை இரணியல் போலீசார் தேடி வருகின்றனர்
காட்டுவிளையில் 27 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர்.

திங்கள்சந்தை அருகே இளைஞர் கொ*** தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை!

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் இளைஞர் சமீம் (27) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய ஆற்றின்கரை காட்டுவிளையைச் சேர்ந்த உசேன் என்பவரின் மகனான சமீமுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பிய சமீமை, நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்குச் சென்ற முகேஷ் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சமீமை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

காணொளி காட்சிகள்

சமீமை ஓட ஓட விரட்டி குடும்பத்தினர் முன்னிலையில் கொ** செய்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த இரணியல் போலீசார், தலைமறைவாக உள்ள முகேஷ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here