தக்கலை: வைகுண்டசாமி பாதயாத்திரை – குமரி எம்பி பங்கேற்பு

0
470

சாமித்தோப்பு அய்யாவை குண்டசாமி பாதயாத்திரை ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் முத்திரிக் கிணற்றில் இருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில் இரண்டாம் நாளான யாத்திரை நிறைவு செய்த போது கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார், 

வருகை தந்த விஜய் வசந்த் அவர்களை பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளித்தார். பின்னர் அங்குள்ள யாத்ரீகர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த பாதயாத்திரையானது மார்த்தாண்டம், அமரவிளை வழியாக வருகிற 21-ந்தேதி திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியில் உச்சிப்படிப்பு அய்யாவுக்கு பணிவிடையுடன் நிறைவடைகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here