குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த கண்ணபிரகாஷ் (43) என்பவர், நேற்று (மே 5) தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று கண்ணபிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.















