நியூஸிலாந்து ஏ அணி​யுடன் டெஸ்ட்: தேவ்​தத் படிக்​கல் 199 ரன்கள் குவிப்பு

0
28

நியூஸிலாந்து ஏ அணி​யுடனான கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் இந்​தியா ஏ அணி 2-வது இன்​னிங்​ஸில் 5 விக்​கெட் இழப்​புக்கு 377 ரன்​கள் எடுத்​துள்​ளது. தேவ்​தத் படிக்​கல் 199 ரன்​கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்​தியா ஏ, நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடை​யி​லான அதி​காரப்​பூர்வ முதலா​வது டெஸ்ட் போட்டி நியூஸிலாந்​தின் லின்​காயின் நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இந்​தியா ஏ அணி முதல் இன்​னிங்​ஸில் 113 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்​னிங்ஸை விளை​யாடியது நியூஸிலாந்து ஏ அணி. முதல் நாள் ஆட்​டநேர இறுதி​யில் நியூஸிலாந்து ஏ அணி 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று 2-ம் நாள் ஆட்​டத்தை தொடங்​கிய நியூஸிலாந்து ஏ அணி 317 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

ரைஸ் மரியு 76, கர்ட்​டிஸ் ஹீப்பி 44, டீன் பாக்ஸ்கிராப்ட் 51, கிறிஸ்டியன் கிளார்க் 42 ரன்​கள் சேர்த்​தனர். இந்​தியா ஏ அணி தரப்​பில் அன்​ஷுல் கம்​போஜ், ஆகிப் நபி ஆகியோர் தலா 3, ஆகாஷ் தீப் 2, முகேஷ் சவுத்ரி, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய ஏ அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்​துள்​ளது. யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 5, கே.எல்.ராகுல் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்தனர்.

இதையடுத்து 3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த தேவ்​தத் படிக்​கல்​லும், சாய் சுதர்​சனும் நிதானமாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர். ஆட்​டநேர இறுதி​யில் தேவ்​தத் படிக்​கல் 56 ரன்​களும், சாய் சுதர்​சன் 39 ரன்​களும் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

98 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள நிலை​யில் இந்​திய ஏ அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்​தைத் தொடங்கியது. 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாய் சுதர்சன் 184 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரேல் 2 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு யாஷ் ரத்தோட் உடன் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 248 பந்துகளில் 199 ரன்கள் எடுத்து தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார்.

3-ம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இந்த போட்டியில் தற்போது 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரத்தோட் 66 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களுடன் உள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here