தக்கலை: ஆசை வார்த்தை கூறி ரூ. 35 லட்சம் மோசடி

0
530

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்த ஸ்வீட்லின் ஞானரெஜி ( 47). இவர் அங்குள்ள உள்ள ஒரு சொகுசு விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த விடுதியில் கேரள மாநிலம் பகுதியை சேர்ந்த சனல் (37) என்பவர் தங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் சனல் தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் நல்ல பழக்கம் உள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஸ்வீட்லின் ஞானரஜி தனது மனைவிக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கித் தர கேட்டு, சனலிடம் ரூ. 35 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை விடுதியில் வைத்து சனல் வாங்கும்போது விடுதி உரிமையாளர் எட்வின் ஜோஸ் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் பெற்று நீண்ட நாட்களாக வேலை வாங்கிக் கொடுக்காததால் சனல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டது சனல் விடுதிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் சந்தேகம் அடைந்து மரிய எட்வின் ஜோசிடம் கேட்டபோது, அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஞானரஜி, சனல் மற்றும் மரிய எட்வின் ஜோஸ் மீது தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here