சையது முஸ்டாக் அலி டி20 தொடர்: 6 ரன் வித்தியாசத்தில் தமிழகம் தோல்வி

0
17

சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் நேற்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கமரன் இக்பால் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், கேப்டன் ஷுபம் கஜுரியா 34 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர்.

தமிழக அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 202 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக அமித் சாத்விக் 67, நாராயண் ஜெகதீசன் 35 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தமிழக அணியால் 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here