அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனக்’ புகார் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசியதாவது: தலைமை வகித்துப் பேசியதாவது:
அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வைக்க வேண்டும் புகார் பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும். மாணவர்களின் இடைநிற்றலைக் கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து, பெற்றோருக்கு ஆசிரியர்கள் புரியவைக்க வேண்டும். மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தக்க ஆலோசனையும், பயிற்சியும் வழங்க வேண்டும். மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஸ்கேன் மையங்களை மருத்துவத் துறையினரும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை சமூக நல அலுவலர்களும் ஆய்வு செய்து, உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, பெண்களை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும். , நாடு வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர்செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா உள்ளிட்டோர் கலந்துெகாண்டனர்.