விஜய் ரசிகராக சவுந்தரராஜா!

0
221

தவறான பாதையில் செல்லும் பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.

ஜெயவேல் இயக்கியுள்ள இதில், சவுந்தரராஜா, பூவையார், சாய் தீனா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் போலீஸாக சவுந்தரராஜா நடித்துள்ளார்.

படம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எதிர்பாராமல் வன்முறையில் இறங்குகின்றனர். அது ஏன், எதற்காக? என்பது கதை. இப்படத்தில் நான் விஜய் ரசிகராக வருகிறேன். படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்டும் இருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும்.

நான் நடித்துள்ள ‘சாயாவனம்’ படம் முடிவடைந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து ‘வயலன்ஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் நடிக்கிறேன். இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here