சிங்க்பீல்டு செஸ்: பிரக்ஞானந்தா தோல்வி

0
35

சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டார். கிராண்ட் செஸ் டூரின் கடைசி தொடரான சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயினிட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.

9 சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியான இதில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தாவும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய வின்சென்ட் கீமர், பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.

3-வது சுற்றின் முடிவில் கிராண்ட்மாஸ்டர்கள் பேபியானா கருணா, வின்சென்ட் கீமர், சாம் செவியன் ஆகியோருடன் பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here