ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 20,000 டன் எரிவாயுவுடன் குஜராத் வந்த கப்பல்

0
18

சு​மார் 20,000 டன் எரிவாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த மார்​ஷல் தீவு​களின் கொடி பொருத்​தப்​பட்ட சரக்​குக் கப்​பல், குஜராத்​தின் கட்ச் மாவட்​டத்​தில் உள்ள கண்ட்லா துறை​முகத்தை வந்​தடைந்​துள்​ள​தாக ஏஎன்ஐ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

‘சிமி’ என்று அடை​யாளம் காணப்​பட்ட அந்​தச் சரக்​குக் கப்​பல், உலக அளவில் மிக முக்​கியப் பாதை​யாகக் கருதப்​படும் ஹார்முஸ் ஜலசந்​தியை கடந்த மே 13 அன்று கடந்​து, இந்​தி​யத் துறை​முகத்தை வந்​தடைந்​த​தாக அறிக்​கை​யில் குறிப்பிடப்பட்டுள்​ளது. இந்​தி​யா​வில், பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் வணி​கப் பயன்​பாட்​டிற்​கான எல்​பிஜி சிலிண்டர்களின் விலையை கடந்த இரண்டு வாரங்​களுக்கு முன்பு உயர்த்தின.

அதன்​படி, 19 கிலோ எடை​யுள்ள வணிக சிலிண்​டரின் விலை ரூ.993-ம், 5 கிலோ சிலிண்​டரின் விலை ரூ.261.50-ம் உயர்த்தப்பட்டது. இதன் காரண​மாக, புலம்​பெயர்ந்த தொழிலாளர்​கள், பொது சமையலறை​கள், சிற்​றுண்​டிச்​சாலைகள், சாலை​யோர உணவகங்​கள் மற்​றும் தொழில்​முறைப் பயன்​பாட்​டாளர்​களின் எரிபொருள் செலவு 47 சதவீதத்​திற்​கும் மேலாக அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்​தி​யும் எரிபொருள் விநி​யோகப் பாதைகளும் முடங்​கி​யுள்​ள​தால், எரிசக்தி நெருக்​கடியைக் குறிப்​பிட்​டுப் பேசிய பிரதமர் மோடி, குடிமக்​கள் எரிபொருளைச் சிக்​க​ன​மாகப் பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொண்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here