நடிகர் சண்முக பாண்டியன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்.பி தயாரித்து வருகிறார். இதில், மணிசேயோன் இயக்கத்தில் உருவாகி வரும் கிங் அண்ட் குயின்ஸ் படத்தில் சண்முக பாண்டியனுடன் ஆதியா பிரசாத், இளவரசு, பிரகதி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில், சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி என பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்குப் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். மனு ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதற்கிடையே திரு இயக்கத்தில் ‘வாண வேடிக்கை’ படத்திலும் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இதில் ஷிவானி ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.














