கன்னியாகுமாரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோயில் தனியார் கல்லூரில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார், அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல் பகுதியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகியான இருவரும் ஒன்றாக சேர்ந்து திரும்புவது வழக்கம், இந்த நிலையில் மழையின் போது கல்லூரி முடிந்து பாதிக்கப்பட்ட மாணவியும், அவருடன் படிக்கும் மற்றொரு மாணவியும் பேருந்துக்காக காத்துள்ளனர். அவ்வழியாக காரில் வந்த தக்கலை மருதுகோட்டை பகுதியை சேர்ந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான கிறிஸ்டோபர், காரை நிறுத்தி உதவுவது போல தன்னுடைய காரில் அழைத்து சென்றுள்ளார், தவெக பெண் நிர்வாகியான கல்லூரி மாணவியை இறக்கி விட்ட கிறிஸ்டோபர், குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை வீட்டில் கொண்டு செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார் , கனமழை அதிகரித்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி மாணவிகி தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி மாணவி கூச்சலிட்டதால் அவரை சமாதானம் செய்து மாணவியின் வீட்டிற்கு அருகே விட்டுவிட்டு கிறிஸ்டோபர் தப்பி சென்றதாக தகவல். இந்த நிலையில் அந்த பெண் சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து பெற்றோரிடம் சென்று கொட்டிக்கொடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரனை நடத்திய போலீசார், அந்த புகார் மீதான விசாரனையை தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றியுள்ளார். விசாரனை நடத்திய தக்கலை போலீசார் கிறிஸ்டோபர் மீது 75/1 மற்றும் 75/2 BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது தலைமறைவான கிறிஸ்டோபர் தேடி வருகின்றன. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் மழையிலிருந்து ஒதுங்கி நின்ற மாணவிக்கு பாலியல் சீண்டல்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு!














