உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல் மூழ்கடிப்பு

0
17

லிபியா கடற்​பகுதி​யில் உக்​ரைன் நடத்​திய ட்​ரோன் தாக்​குதலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க்​கப்​பலான மெர்​குரி மூழ்​கடிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பான வீடியோவை வெளியிட்டுள்ள உக்​ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: லிபியா கடற்​கரைக்கு அப்​பால் எங்​கள் வீரர்​கள் உக்​ரைனில் தயாரிக்​கப்​பட்ட 7 கடற்​படை ட்​ரோன்​களைக் கொண்டு தாக்​குதல் நடத்​தினர். அப்​போது எதி​ரி​களின் அனைத்​துத் தடுப்பு முயற்​சிகளை​யும் முறியடித்து, ரஷ்யாவின் போர்க்​கப்​பலான ‘மெர்​குரி’ மூழ்​கடிக்​கப்​பட்​டது.

2023-ம் ஆண்டு ரஷ்​யக் கடற்​படை​யில் இணைக்​கப்​பட்ட மிகப் புதிய போர்க்​கப்​பல்​களில் இது​வும் ஒன்​றாகும். இந்​தத் தாக்​குதலில் போர்க்​கப்​பலுடன் சேர்ந்து ரஷ்யாவின் ‘கேஏ-27’ ரக போர் ஹெலிகாப்​டரும் அழிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ஆயுதங்​களைக் கொண்டு செல்ல ரஷ்யா பயன்​படுத்தி வந்த ‘எம்.வி. அங்​காரா’ என்ற சரக்​குக் கப்​பலை​யும் எங்​கள் ட்​ரோன்​கள் துல்​லிய​மாகத் தாக்​கின.

இந்த நட​வடிக்​கைக்​காக உக்​ரைன் பாது​காப்பு சேவை மற்​றும் பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு பாராட்​டுகள். இவ்​வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்​ளார். இதனிடையே, தங்​கள் நாட்டு கடற்​பகுதி​யில் நடத்​தப்​பட்ட இந்​தத் தாக்​குதலுக்கு கிழக்கு லிபிய நிர்​வாகம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here