‘எரிசக்தி’ போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்: ட்ரம்ப் தகவல்

0
18

 எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற எரிசக்தி போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதள பதிவில், “ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் எரிசக்தி போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதை முறித்துக் கொள்ள வேண்டாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதை ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். ‘சர்வதேச நாடுகளின் சந்தைகளுக்கு டீசலை விநியோகம் செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது’ என்று ட்ரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் எரிசக்தி போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் தயார்

“ட்ரம்ப் அறிவித்துள்ள எரிசக்தி போர் நிறுத்தம் குறித்து நாங்கள் விவாதித்தோம். உக்ரைன் இதை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் இதை ரஷ்யாவும் ஆதரிக்க வேண்டும். அதற்கான தகவலை அமெரிக்க தரப்பு தெரிவிக்க வேண்டும்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இந்தச் சூழலில் எரிசக்தி போர்நிறுத்தம் குறித்து ரஷ்ய அரசு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பிறகு உக்ரைனின் கீவ் நகரில் உள்ள எரிசக்தி அமைப்பு மீது ரஷ்யா, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

முன்னதாக, உக்ரைன் அதிபரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அவர் திறம்பட மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தார்.

60 நாட்கள் போர்நிறுத்தம்

இது தொடர்பாக ட்ரம்ப்புக்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, “எங்களுக்கு இரண்டு மாத காலம். அதவாது 60 நாட்கள் ஒட்டுமொத்த போர்நிறுத்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் தேர்தலை நடத்துவோம். அதன் மூலம் உக்ரைன் மக்களின் தேர்வை ஏற்போம். இது (அதிபரை தேர்வு செய்வது) எங்கள் நாட்டு மக்களின் முடிவில் தான் உள்ளது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here