‘எல்லையைத் தாண்டிய உக்ரைன், நேட்டோ நாடுகள்’ – ரஷ்யா கடும் எச்சரிக்கை

0
10

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக அணு ஆயுதத் தாக்குதல் பற்றி பரிசீலிப்​போம் என ரஷ்ய பாது​காப்​புத் துறை துணைத் தலை​வர் டிமிட்ரி மெத்வதேவ் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய முன்​னாள் அதிபர் டிமிட்ரி மெட்​வ​தேவ், விளாடிமிர் புதினின் கீழ் பிரதம​ராக​வும் பணி​யாற்றி உள்​ளார். இப்​போது ரஷ்​யா​வின் பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வ​ராக உள்ள மெட்​வ​தேவ், ‘மாஸ்கோ ஜர்​னல் ஆஃப் இன்​டர்​நேஷனல் லா’ இதழில் ஒரு கட்டுரை எழுதி உள்​ளார்.

‘நாட்​டின் இறை​யாண்மை மற்​றும் அணு ஆ​யுதங்​கள்: தேசிய பாது​காப்பை உறுதி செய்​வதற்​கான சர்​வ​தேச சட்ட அம்​சங்​கள்’ என்ற தலைப்​பில் வெளி​யாகி​யுள்ள அதில் கூறி​யிருப்​ப​தாவது: உக்ரைனும் நேட்டோ தோழமை நாடு​களும் சில எல்​லைகளை ஏற்கெனவே தாண்​டி​விட்​டன. பேரழிவை ஏற்​படுத்​தும் அணு ஆயுதமல்​லாத வழிகளை பெரு​மள​வில் பயன்​படுத்​துகின்​றன. இந்த நடவடிக்கை முன்​னெச்​சரிக்கை அடிப்​படை​யில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​து​வது குறித்து யோசிக்​கும் நிலைக்கு ரஷ்​யாவை தள்​ளக்​கூடும்.

மேலும் மேற்​கத்​திய நாடு​கள் கிவுக்கு (உக்​ரைன்) மறை​முக​மாக அணு ஆ​யுதங்​களை விநி​யோகித்​தால் நாங்​களும் அணு ஆயுதத் தாக்​குதல் நடத்​து​வது குறித்து பரிசீலிப்​போம். ரஷ்​யா​வுக்கு அணு ஆ​யுதங்​களைப் பயன்​படுத்​து​வதற்​கான உரிமை மட்​டுமல்ல, அதற்​கான கடமை​யும் உள்​ளது.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. ரஷ்யா அணு ஆயுதத்​துடன் கூடிய செயற்​கைக்​கோள் ஒன்றை ஏவத் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்ள நிலை​யில் மெட்​வ​தேவ் இவ்​வாறு எச்சரிக்கை விடுத்​துள்​ளார். `ஸ்​புட்​னிக்​-எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அணு ஆ​யுத செயற்​கைக்​கோள் பிற செயற்​கைக்​கோள்​களை முடக்க அல்​லது அழிக்​கப் பயன்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது. அதே​நேரம், ஜெர்​மனி​யின் பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரக

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here