பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் அவசரநிலை பிரகடனம் – இம்ரான் கானுக்காக போராட்டம் தீவிரம்

0
16

 சட்டம் – ஒழுங்கு மோசமடைந்து வருவதாக சொல்லி பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்தது அந்நாட்டு அரசு.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை விடுவிக்க கோரியும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கோரியும் அந்த மாகாணத்தின் முதல்வர் சோஹெய்ல் அஃப்ரிடி தலைமையில் பேரணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டமும் நடைபெறுகிறது.

இந்தச் சூழலில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்த உத்தரவு அரசின் பரிந்துரையின் பேரில் அமல் செய்தார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. அரசியலமைப்பின் 232(1) மற்றும் 234(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தீவிரவதாக தாக்குதல்கள் மற்றும் மாகாணத்தில் அரசு இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்து. அந்த மாகாண ஆளுநர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர், மாகாண அமைச்சர்கள், மாகாண அரசு ஆலோசகர்கள், சிறப்பு உதவியாளர்கள் மற்றும் மாகாண அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் தங்களது பதவியை இழந்துள்ளனர்.

இதனால் இனி அந்த மாகாணத்தில் அரசு ரீதியான நிர்வாக பொறுப்பு மற்றும் முக்கிய முடிவுகளை நடுவண் அரசு மேற்கொள்ளும்.

இம்ரான் கான்:

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரின் உடல்​நிலை மிக​வும் மோசமடைந்து வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன. அவரது உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாக​வும் அவரை சந்​திக்க அனு​மதி மறுப்​பதாக​வும் அவரது குடும்​பத்​தினர் குற்றம்சாட்டி வரு​கின்​றனர்.

இந்த சூழலில் இம்​ரானை விடு​தலை செய்ய வேண்​டும் என பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாஃப் (பிடிஐ) கட்சி வலியுறுத்தி வரு​கிறது. இத்தகைய நிலையில் பிடிஐ ஆட்சி அமைத்த கைபர் பக்துன்க்வாவில் அவசரநிலை அமலுக்கு வந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here