குமரி மாவட்ட நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரூ.137.41 கோடி – ஆட்சியர் தகவல்

0
40
மணியன்குழி பள்ளிவாசலில் தக்கலை டிஎஸ்பி காந்தி தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணியன்குழி பள்ளிவாசலில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தக்கலை டிஎஸ்பி காந்தி எடுத்துரைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ள ரூ.137.41 கோடி ஒதுக்கீடு ,கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாடு நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வைத்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.130 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

அதன்படி, கன்னியாகுமரி சட்டமன்றம் மற்றும் தோவாளை பகுதிக்குட்பட்ட 11 இடங்களில் ரூ.18.02 கோடி மதிப்பிலும்,

நாகர்கோவில் சட்டமன்றம், நாகர்கோவில் நெடுஞ்சாலைக்குட்பட்ட 9 இடங்களில் ரூ.9.21 கோடி மதிப்பிலும்,

குளச்சல் சட்டமன்றம் குளச்சல் பகுதியில் 21 இடங்களில் ரூ.46.39 கோடி மதிப்பிலும்,

பத்மநாபபுரம் சட்டமன்றம் தக்கலை பகுதியில் 9 இடங்களில் ரூ.9.86 கோடி மதிப்பிலும்,

விளவங்கோடு சட்டமன்றம் குழித்துறை பகுதியில் 7 இடங்களில் ரூ.14.71 கோடி மதிப்பிலும்,

கிள்ளியூர் சட்டமன்ற பகுதியில் 20 இடங்களில் ரூ.39.22 கோடி மதிப்பிலும் என சாலைகளை மேம்படுத்துதல், சாலைகளை அகலப்படுத்துதல், பாலம் அமைத்தல், மதகு பணிகள், பேவர் பிளாக் அமைத்தல், வடிகால் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல், சாலை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட 77 பணிகள் உட்பட சுமார் ரூ.137.41 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here