ராமன்துறை: தாயை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு

0
221

ராமன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சுபேதா (58) என்பவரின் மகள் கோகிலா, தனது தாய் வசிக்கும் வீட்டை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு தாய் சுபேதாவிடம் கேட்டுள்ளார். தாய் மறுத்ததால், மகள் கோகிலாவும் அவரது கணவர் ஜெர்மன்ஸ்சும் சேர்ந்து சுபேதாவை தாக்கி, அவரது உடையைக் கிழித்து, மானபங்கப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த சுபேதா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here