கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் தேசிய வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் எழுச்சி மாற்றத்திற்கான முயற்சி பேரணியை மாவட்ட ஆட்சியர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஏராளமான ஊராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.