கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பார்வதிபுரம், வெள்ளமடம், வடசேரி, கோட்டாறு, இடலாக்குடி, கரிய மாணிக்க புரம், ஆஸ்ரமம் சுசீந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையின் காரணமாக நாகர்கோவிலில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.