டெல்லி போராட்டத்தில் காயமடைந்த மாணவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்த ராகுல் காந்தி

0
29

டெல்லி போ​ராட்​டத்​தில் காயமடைந்த இந்​திய தேசிய மாணவர் சங்க பிர​தி​நி​தி​களை (என்​எஸ்​யுஐ) நேற்று சந்தித்த மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவு தெரி​வித்​தார். அப்​போது வெறுப்​புக்கு அன்பால் பதிலளிப்​போம் என்று மாணவர்​களு​டன் இணைந்து ராகுல் சூளுரைத்​தார்.

இதுகுறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நமது சிங்​கப் பெண்ணான டெல்லி பல்​கலைக்​கழகத்​தில் படிக்​கும் கேரள மாணவி ஆதி​ராவை உங்​களுக்கு அறி​முகப்​படுத்த விரும்புகிறேன். போராட்​டத்​தின்​போது அவர் அடிபட்ட போதி​லும் பயப்​பட​வில்​லை; அவருடைய இதயத்​தில் எந்த வெறுப்​பும் இல்லை. ஆதிரா ஒரு காதில் கேட்​கும் திறனை இழந்​து​விட்​டார்.

கடந்த முறை கண் பார்​வையை இழந்த ஒரு இளைஞரை உங்களுக்​குக் காட்​டினேன்; இப்​போது இந்த மாணவி ஒரு காதில் கேட்​கும் திறனை இழந்​துள்​ளார் என்​பதை வேதனை​யுடன் தெரிவிக்​கிறேன். நம் மீது வெறுப்பை காட்​டிய​வர்​கள் மீது நாம் அன்​பால் பதில் கூறு​வோம்.

அமை​தி​யான முறை​யில் போராட்​டம் நடத்​தி​ய​போது தேசி​யக் கொடியை ஏந்​தி​யதற்​காக கைது செய்யப்​பட்ட சிஜேபி தலை​வர்​களான சவுரவ் தாஸ் மற்​றும் அசுதோஷ் ரங்கா ஆகியோ​ருக்கு 5 நாட்​கள் நீதி​மன்​றக் காவல் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது கடும் கண்​டனத்​துக்​குரியது. தேசி​யக் கொடியை ஏந்​து​வது குற்​றமல்ல. இவ்​வாறு அவர் கூறி​னார்.

போராட்​டம் நடத்​து​வதற்​கான இடத்​திலிருந்து ஜந்​தர் மந்​தர் சமீபத்தில் நீக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அப்​பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து அமை​தி​யைச் சீர்​குலைத்​த​தாகக் கூறி, தாஸ் மற்​றும் ரங்கா ஆகிய இரு​வரை​யும் கைது செய்து நேற்று காலை மாஜிஸ்​திரேட் முன்பு ஆஜர்​படுத்தி திஹார் சிறை​யில் அடைத்​தனர்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரின் ராஜி​னா​மாவை வலி​யுறுத்தி முழக்​கமிட்​டபடி, தடுப்​பு​களைத் தாண்டி அனு​ம​திக்​கப்​ப​டாத பகு​திக்​குள் நுழைந்​த​தால் அரசு ஊழியரைப் பணி செய்ய விடா​மல் தடுத்​தல், அத்​து​மீறி நுழைதல் உள்​ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை அவர்​கள் மீது வழக்​குப்​ பதிவு செய்திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here