“இது சிவனின் தாண்டவம், வியூகம் தேவையில்லை” – போராட்டம் குறித்து ராகுல் காந்தி கருத்து

0
14

இது சிவனின் தாண்​ட​வம். இதற்கு எந்த வியூ​க​மும் தேவை​யில்லை என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி எதிர்க்​கட்​சிகள் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. இந்த சூழலில் டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் அந்த கட்​சி​யின் மூத்தத் தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: தலை​மைத் தேர்தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும். அடுத்து பிரதமர் மோடி, அமித் ஷாவை பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும். இது ஒற்றை போராட்​டம், பலதரப்பு போராட்​டம் கிடை​யாது. எங்​கள் லட்​சி​யம் நிறைவேறும் வரை ஓயமாட்​டோம்.

தற்​போதைய போராட்​டத்​துக்கு ஒரு வியூ​கம் வகுக்க வேண்​டும் என்று எனது தங்கை (பிரி​யங்கா காந்​தி) அறி​வுரை கூறி​னார். எனது தங்​கைக்கு தெளி​வான பதிலை அளித்​தேன். இது சிவனின் தாண்​ட​வம். இதற்கு வியூ​கம் தேவை​யில்​லை. இன்​றைய தினம் உச்ச நீதி​மன்​றம் நோக்கி பேரணி செல்​கிறோம். நாளை வேறு ஏதாவது ஒரு போராட்​டம் நடை​பெறும். இடை​வி​டா​மல் போராட்டங்​கள் நடை​பெற்​றுக் கொண்டே இருக்​கும். சிவனின் தாண்​ட​வத்​தில் யார் வேண்​டு​மா​னாலும் பங்​கேற்​கலாம்.

பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஒரு விஷ​யத்தை கூற விரும்புகிறேன். அமலாக்​கத் துறை, சிபிஐ, வெளி​யுறவுத் துறையைச் சேர்ந்த 200 அரசு அதி​காரி​கள் எங்​களோடு தொடர்பில் உள்​ளனர். என்ன நடக்​கிறது என்​பதை அவர்​கள் எங்களுக்கு தெளி​வாக விளக்கி கூறுகின்​றனர். தலை​மைத் தேர்தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் வாக்கு திருட்​டில் ஈடுபடுகிறார். அவரை பாது​காக்க ஒட்​டுமொத்த அரசு இயந்திரமும் பயன்​படுத்​தப்​படு​கிறது. எங்​களது போராட்​டம் ஒரு நாளில் ஓயாது. இடை​வி​டா​மல் தொடர்ந்து போராடு​வோம்.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு கடிதம் அனுப்​பினோம். இந்திய ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டும். நேர்​மை​யான முறை​யில் தேர்​தலை நடத்த வேண்​டும் என்ற எங்​களது கவலையை அவர் புரிந்து கொண்டு உள்​ளார். இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்ய அவர் அறி​வுறுத்தி உள்ளார். இதன்​படி இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் உச்ச நீதி​மன்​றத்​துக்கு சென்று மனு தாக்​கல் செய்​வார்​கள்.

ஒட்​டுமொத்த டெல்​லி​யும் சிறைச்​சாலை​யாக மாற்​றப்​பட்டு உள்ளது. டெல்​லிக்கு வரும் ரயில்​கள், பேருந்​துகள் தடுத்து நிறுத்தப்​படு​கின்​றன. போராட்​டத்​தில் ஈடு​படும் பெண்​களை ஆர்எஸ்​எஸ்​காரர்​கள் அடித்து விரட்​டு​கின்​றனர். தலை​மைத் தேர்தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மாரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்​. இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here