புதுக்கடை அருகே செந்தறை பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் நிக்சன் (24). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சம்பவ தினம் தனது தந்தை நெல்சன் (63), தாய் பிரான்சிஸ்காள் (57), வீட்டு வேலையாள் சுகந்தி (47) ஆகியோருடன் காரில் தேங்கா பட்டணம் – கருங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
கார் தொழிக்கோடு பகுதியில் செல்லும்போது, எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த மாருதி கார் ஒன்று நிக்சன் ஓட்டிய காரில் மோதியது. இதில் நெல்சன், பிரான்சிஸ்காள், சுகந்தி காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.