புதுக்கடை அருகே கீழ்குளம், பருத்தியடைப்பு விளையை சேர்ந்தவர் ஆல்பன் (44). இவருக்கும் அதே பகுதி அரசு (44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அரசு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று வரும் போது, எதிரே வந்த ஆல்பனை தடுத்து நிறுத்தி அரசு மற்றும் 2 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ஆல்பன் காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று (3-ம் தேதி) அரசை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.