புதுக்கடை: சிறுமியிடம் செயின் பறித்த.. 4 பேர் கைது

0
520

புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதி தும்பாலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் லோடு மேனாக வேலை பார்க்கிறார். இவர் மகள் அக்ஷரா (14). இவர் 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தற்போது பள்ளி விடுமுறையான காரணத்தால் புதுக்கடையில் ஒரு தையல் பயிற்சி கூடத்தில் சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை மாணவி பயிற்சி முடிந்து வீட்டுக்கு தும்பாலி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை தடுத்து நிறுத்தி, அவரது கழுத்தில் கிடந்த ஒன்றேகால் பவுன் செயின், 2 கிராம் மோதிரம் போன்றவற்றை அச்சுறுத்தி பறித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.  
      இது குறித்து சிறுமியின் தந்தை ராஜன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புதுக்கடை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில், நேற்று திருடிய 4 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் ஈரோட்டை சேர்ந்த சக்தி (20), சந்தோஷ் (21), கோயம்புத்தூரை சேர்ந்த வளையாபதி (24), மஞ்சுளா (21) என தெரிய வந்தது. புதுக்கடை போலீசார் கைது செய்து 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here