புதுக்கடை: எல்லை பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

0
48

புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இதுவரையிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஸ்ரீபா மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு ஹாலில் உள்ள மின் விசிறியில் ஸ்ரீபா தூக்கிட்டு தற்கொலை செய்தார். பின்னர் உறவினர்கள் கண்டு, உடனடி புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பான தகவல் ஸ்ரீபா கணவர் அனிஷ் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபாவின் அண்ணன் சிவகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here