மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு

0
31

மாநக​ராட்சி பள்​ளி​களில் 10, 12-ம் வகுப்பு தேர்​வு​களில் சிறப்​பிடம் படித்த மாணவர்கள், ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​ கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பரிசுகளை வழங்கி கவுர​வித்​தார்.

சென்னை மாநக​ராட்சி பள்​ளி​களில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்​வில் அதிக மதிப்​பெண்​கள் பெற்ற 1,085 மாணவ, மாண​வியர், அதிக மதிப்​பெண்​கள் பெற உறு​துணை​யாக இருந்த 1,005 தலை​மை​யாசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் என மொத்​தம், 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்​கும் விழா, ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நடை​பெற்​றது.

மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில் நடை​பெற்ற விழா​வில், பள்​ளிக் ​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் கலந்​து​கொண்​டு, மாநக​ராட்சி பள்​களில், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 22 பள்​ளி​கள், 2 மேல்​நிலைப் பள்​ளி​கள் என மொத்​தம் 24 பள்​ளி​களுக்கு தலா ரூ.1 லட்​சம், கல்வி ஊக்​கத்​தொகை வழங்​கி​னார்.

மேலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்​திய 34 பள்​ளித் தலை​மை​யாசிரியர்​கள், 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் 600-க்கு 500 மதிப்​பெண்​களுக்கு மேல் பெற்ற 293 மாணவர்​களுக்கு தலா ரூ.1,500 வீத​மும், பாட​வாரி​யாக 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 391 ஆசிரியர்​களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீத​மும், ரொக்​கப்​ பரிசுகளை வழங்​கி​னார்.

இதே​போன்று 10-ம் வகுப்பு தேர்​வில் சிறப்​பிடம் பிடித்த மாணவர்​கள், ஆசிரியர்​கள், பள்​ளி​களுக்​கும் ​பரிசு வழங்​கப்​பட்​டது. இவ்​விழா​வில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் இணை ஆணை​யர் க.கற்​பகம் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here