நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

0
790

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்துகொள்ளலாம். இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுனர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here